ஆம்புலன்ஸை நிறுத்தி கொரோனா இளம்பெண்ணை வண்புணர்வு செய்த டிரைவர்..

கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்னும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் மாநிலம், பத்தினம்திட்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கபட்ட 20 வயது பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பெண்ணின் வாசிப்பிடத்திற்கு வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸை நவ்பல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸில் தனியாக அந்த இளம் பெண் ஏறி சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்சிற்குள் வைத்து ஓட்டுனர் துஷ்பிரோயகம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகே அவர், அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெண் தனக்கு நிகழ்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நவ்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நவுஃபல் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, நவ்பலை சஸ்பெண்ட் செய்து கேரள மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தன்னை மன்னித்து விடுமாறு இளம் பெண்ணிடம் நவுஃபல் கெஞ்சிய போது அந்த பெண் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது, அந்த வீடியோவை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு நவுஃபலை பி.பி.ஈ கிட் அணிந்து அழைத்து வந்து நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துஷ்பிரோயகம் செய்த சம்பவம் கேரளாவில் தற்போது மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.