21 வயதில் தமிழரை காதலித்து திருமணம் செய்த நடிகை! இருவருக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் தெரியுமா?

நடிகை நீலிமா ராணி தனது 12-வது திருமண நாளை கொண்டாடி அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சிறுவயதிலேயே திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் வில்லியாகவும் கதாநாயகியாகவும் நடித்து தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நீலிமாராணி.

 

View this post on Instagram

 

September 4th ? 12 years completed gracefully ???? entered into teens ?? keep us in your prayers my extended family ?❤️

A post shared by Neelima Esai (@neelimaesai) on

நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும். இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம்.

அவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம்.

ஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சந்தோசமாக இந்த திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின்படி தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இறந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர். அந்த பெண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந்தோஷமும் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.