கள்ளகாதலுக்குள் மற்றொரு காதல்.. அரங்கேறிய கொடூர கொலை..

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை குண்டூர் நத்துகுழிபட்டி பகுதியை சார்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜாமணி (வயது 42). ராஜாமணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2012 ஆம் வருடத்தின் ஜூலை மாதம் 22 ஆம் தேதி, அங்குள்ள அரியூர் நாட்டில் அம்பலக்கூடு பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த வாழவந்திநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ராஜாமணிக்கும் – கட்டிட தொழிலாளர்களான திருச்சி மாவட்டம் நெட்டவேலம்பட்டி அசோகன் (வயது 24), கொல்லிமலை இலக்கியம்பட்டி மதியழகன் (வயது 35) ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், கள்ளகாதலர்களை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக இருவரிடமும் தனித்தனியாக கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளகாதலர்கள் இருவரும் சேர்ந்து ராஜாமணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அங்குள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.