உங்களுக்கு மூக்கடைப்பு இருக்கா?

கருஞ்சீரகம் கை வைத்தியத்துக்கு மட்டுமல்ல இதை யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள். சித்தமருத்துவத்திலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இதில் வைட்டமின்கள், கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி கருஞ்சீரகம் தான் தாவரங்களிலேயே நோய் எதிர்ப்புசக்தியை கொண்டிருக்கும் உணவு பொருள் என்று கருதப்படுகின்றது.

குறிப்பாக சளி பிரச்சினை, மூக்கடைப்பு போன்றவற்றில் எளிய முறையில் தீர்வினை வழங்குகின்றது.

மூக்கடைப்பு உண்டாகும் போது படுக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் உட்காரவும் இயலாமல் மூச்சு விடுதலே சிரமத்துக்கு உள்ளாக்கும்.

இதனை எளிய முறையில் போக்க கருஞ்சீரகத்தை அந்தகாலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

அந்தவகையில் தற்போது மூக்கடைப்பு சரி செய்ய எப்படி கருஞ்சீரகத்தை பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

எப்படி தயாரிப்பது?
  • சுத்தமான தேங்காயெண்ணெய் 50 மில்லி அளவு எடுத்துகொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் அளவு கருஞ்சீரகப்பொடி சேர்க்க வேண்டும்.
  • இவை இரண்டும் நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைக்கவும். பிறகு இதை வெள்ளைத்துணியில் வடிகட்டி, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
  • மூக்கடைப்பு இருக்கும் போது இரண்டு சொட்டு மட்டும் மூக்கில் விட வேண்டும்.
  • தொடர்ந்து மூன்று நாட்கள் இரண்டு வேளை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். குறட்டை போகும்.
நன்மை என்ன?
  • இந்த எண்ணெய் பீனிசம் என்னும் நோய்க்கும் மருந்தாக இருக்கிறது. இந்நோயால் வரும் தும்மல், மூக்கிலிருந்து தொடர்ந்து நீர் வடிதல், தலைவலி, நெற்றிப்பகுதி பாரம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெயை மூக்கில் ஒரு துளியையும், நெற்றிப்பகுதியில் தேய்த்தும் வந்தால் இவை தீவிரமாகாமல் இருக்கும். சளி தொடர்பான நோய்களும் நீங்கும்.
  • கருஞ்சீரகம் கபம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
  • இதில் தைமோகுயினன் என்னும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருகின்றது.
எப்படி பயன்படுத்தலாம்?
  • 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு இந்த எண்ணெயை இரண்டு துளி விடலாம்.
  • இதனால் அரை மணி நேரத்தில் மூக்கடைப்பு விலகி மூச்சு விடுதலில் இருந்த சிரமம் குறையும்.
  • பெரியவர்கள் தூங்கும் பொது காலை இரவு என இரண்டு வேளையும் இரண்டு சொட்டுகள் வீதம் மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
  • சைனஸ்,ஆஸ்துமா இருப்பவர்கள் தீவிரமாகாமல் இருக்க இந்த எண்ணெயை மூக்கின் மீது, தலையின் மீது பற்று போல் தேய்த்துவரலாம்.
குறிப்பு
  • கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு மேல் இதை மூக்கில் விடக்கூடாது.
  • அதிக முறையும் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
  • இது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சித்தமருத்துவரின் ஆலோசனையோடு பக்குவமாக தயாரித்து எடுத்துகொள்ளலாம்.