நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும்.

குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும்.

நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் நோய்த்தொற்றுக்கு எளிதாக உண்டு பண்ணும்.

அதுமட்டுமின்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத நேரங்களில் நாம் அறியாமல் செய்யும் விஷயங்களும் கூட கர்ப்பப்பையில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.

அந்தவகையில் நாப்கின் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத, பின்பற்றி வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நாப்கின் பயன்படுத்தும் போது செய்யும் தவறுகள்
  • தற்போது அதிக நறுமணம் கொண்ட நாப்கின்கள் பயன்பாட்டில் வந்திருக்கிறது. இதை தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் அதிக ரசாயனம் சேர்க்கப்பட்ட நாப்கின் தொடர்ந்து பயன்படுத்தும் போது அவை புற்றுநோய் வரையிலும் பாதிப்பை உண்டாக்க செய்யும்
  • உதிரபோக்கு அதிகமாக இல்லை என்று நாப்கின் நனையும் வரை வைத்திருந்து மாற்றுவது, அதிக உதிரபோக்கு இருந்தாலும் நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது, வெளியில் செல்லும் போது நாப்கின் மாற்ற தயங்கி சிறுநீரையும் சேர்த்து அடக்கி கொள்வது இவை எல்லாமே அதிக பாதிப்பை உண்டாக்கும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஒவ்வாமையையும் உண்டு செய்யும். அரிப்பு மற்றும் சிவப்பை உண்டாக்கும்.
  • மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்தும் போது உரிய முறையில் ஸ்டிக்கரை பிரிக்காமல் அவசர அவசரமாக உள்ளாடையில் வைத்துகொள்வது நாள் முழுக்க அசெளகரியத்தை உண்டாக்கும். இப்படி சரியாக பொருத்தாத நாப்கின் மடிப்புகள் சருமத்தில் உராயும் போது அலர்ஜியை உண்டாக்கும்.
  • உபயோகித்த நாப்கினை அப்புறப்படுத்தும் போது கைகளை கழுவாமல் அதே கைகளால் வேறு புதிய நாப்கினை பயன்படுத்துவது உண்டு. இதனால் நாப்கினில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கைகளில் ஒட்டிக்கொண்டு பெண் உறுப்பில் படிந்து அரிப்பு, அலர்ஜியை உண்டாக்க வாய்ப்புண்டு.
  • மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளை எல்லா நாட்களிலும் பயன்படுத்துவது ஆரோக்கியமானது கிடையாது. எனவே இதனை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
  • சிலர் நாப்கினுக்கான உள்ளாடைகளை வெயிலில் உலர்த்த அச்சப்பட்டு வீட்டினுள் காயவிடுவார்கள். இதனால் கிருமித்தொற்று உள்ளாடையில் இருக்கும்.
பின்பற்ற வேண்டியவை
  • நாப்கின் வாங்கும் போதே இதன் தயாரிப்பு முறை குறித்து படித்து பாதுகாப்பானதாக வாங்க வேண்டும்.
  • உதிரபோக்கு இருந்தாலும் ரத்த போக்கு இல்லாவிட்டாலும் கூட நாப்கினை குறைந்தது 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் மாற்றிவிட வேண்டும்.
  • இரவு நேரங்களில் குறைந்தது இரண்டு முறையாவது மாற்றிவிட வேண்டும். அதிக ரத்தப்போக்கு இருந்தால் நாப்கின் நனைந்ததுமே மாற்றிவிட வேண்டும்.
  • நாப்கினை பிரித்து அதன் பின்னாடி இருக்கும் ஸ்ட்ரிப் பிரிப்பது அவசியமாகும். இது உள்ளாடைக்கு நடுவே நாப்கினை வைத்து பிறகு நாப்கின் விங்க்ஸ் பகுதியை பிரித்து உள்ளாடையின் இருபக்கமும் சரியாக பொருத்தி வைக்க வேண்டும். நாப்கினின் அகலமான பகுதி முன்பக்கத்தில் வரும்படி வைக்க வேண்டும்.
  • பயன்படுத்திய நாப்கினை அப்புறப்படுத்தும் போது உறையை சுற்றி காகிதம் சுற்றி குப்பைத்தொட்டியில் போட வேண்டும். அதை அப்படியே வைத்திருக்காமல் அப்புறப்படுத்தவும் செய்ய வேண்டும். பிறகு கைகளை சுத்தமாக கழுவி துடைத்து யோனி பகுதியை சுத்தமான அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளை அந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை வெந்நீரில் அலசி வெயில் படும்படி காயவிட வேண்டும். இல்லையெனில் தொற்றுகள் எளிதில் படிந்துவிட வாய்ப்புண்டு.