ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது.
ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் ஆகும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
அந்தவகையில ஆஸ்துமா நோயில் இருந்து எளிதில் விடுபட சில இயற்கை உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- ஆஸ்துமாவை குறைக்க அருகம்புல் சாற்றை தினமும் அதிகாலை வேளையில் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்யலாம். 10 துளசி இலைகளை மென்று வரவேண்டும். இதையும் தினசரி செய்யலாம்.
- கொஞ்சம் உணவில் மாற்றம் செய்யலாம். தூதுவளை இலைகளில் ரசத்தை வைத்து சாதத்தில் பிசைந்து உண்ணலாம். வில்வ இலையுடன், மிளகை சேர்த்து மென்று உண்ணலாம். இதன் பிறகு நன்றாக தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும்.
- மாதுளை சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். முசுமுசுக்கை என்ற இலையை நன்றாக வதக்கி பின்பு உண்ணலாம்.
- மிளகு மூன்று, கற்பூரவல்லி இலை மூன்று, வெற்றிலை இரண்டு எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வற்றியவுடன் அந்த நீரை குடிக்கலாம்.
- ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து கொள்ள வேண்டும். பின்பு காலை மற்றும் மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் சளிப் பிரச்சனைகள் நீங்கிவிடும்.
- மஞ்சள் தூள்1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை கலந்து உண்டு வரலாம். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்ப்பிட்டால், இருமல் போன்ற பிரச்சனைகள் நின்றுவிடும்.
- கடுகை அரைத்து அதனுடன் தேன் கலந்து உண்டால் காலை வேலைகளில் வரும் வறட்டு இருமல் குறைந்து விடும். ஆடாதோடா இலையை கீரைபோல சாதத்திலும் பிசைந்து உண்டு வரலாம்.