ஜெயலலிதா பட நடிகையின் உயிருக்கு இப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என படமாக எடுக்கப்பட்டு வந்தது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார்.

பாலிவுட் திரைக்களத்தில் தற்போது சர்ச்சைகளில் அதிகம் பேசப்படுபவர் இவரே. அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம், பாலிவுட் சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு துணை ராணுவப் படைகள் மூலம் ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பை வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.