காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!!

காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

இன்று காலை முதல் விஜய் சேதுபதி, ரோபோ ஷங்கர், ஆர்த்தி, ராமர் என பிரபலங்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டுவிட்டரில் இவரின் மரண செய்தி போட்டு வனிதாவை டாக் செய்துள்ளனர். அதனை பார்த்த வனிதா எனக்கு அவர் யார் என்றே தெரியாது, இதுவரை பார்த்ததும் இல்லை.