அண்மையில் பலரின் எதிர்பார்ப்பை தூண்ட வைத்த போஸ்டர் KGF 2 படத்தினுடையது எனலாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் எடுக்கப்படுகிறது.
ஹிந்தி சினிமா நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க ஹீரோயினாக ரவீனா டாண்டன் நடிக்கிறார். படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த 2018 ல் எதிர்பார்ப்புகள் பெரிதளவில் இல்லாமல் வெளிவந்து இந்த படம் இப்படியா என பேசவைத்து KGF சாப்டர் 1. பிளாக் பஸ்டர் ஹிட்டாக வசூலை அள்ளியது.
இரண்டு வருடங்களுக்கு பின்னும் அண்மையில் இப்படம் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. TRP ல் 5.12 ரேட்டிங்க்ஸ் பெற்றுள்ளது. சாதாரணமாக இருக்கும் என சிலர் சொல்லி வந்த நிலையில் மற்ற விசயங்களோடு ஒப்பிடுகையில் இது நல்ல ரேட்டிங் என குறிப்பிடப்படுகிறது.