பிக் பாஸ் ஜூலி என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல அரசியல்வாதிகளை கலாய்த்து தான் இவர் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்.
ஆனால் சிறிது காலத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலியை மீம்ஸ் போட்டு கிழித்து எடுக்க தொடங்கினார்கள். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு இருந்த ரசிகர்களும் இல்லாமல் போனார்கள்.
இந்நிலையில், டிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் ஜூலி. அந்த வகையில் சமீபத்தில் உடல் முழுவதும் கரியைப் பூசிக் கொண்டது போல கருப்பு சாயத்தைப் பூசிக் ஜூலி சில புகைப்படங்களை பகிர்ந்து #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த மே மாதம் அமெரிக்காவில் கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையில் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபரை வெள்ளை போலீஸர் கழுத்து நெருக்கி நபரை கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர் . மேலும், சமூக வலைதளத்தில் கூட பல கண்டனங்கள் எழுந்தது
ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த சம்பவம் நடந்து 4 மாதம் ஆன நிலையில் தற்போது 4 இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இருக்கிறார்.
இருந்தாலும், ஜூலியின் இந்த வித்யாசமான போட்டோ ஷூட்களை பலர் கண்டு மறுபடியும் கலாய்த்து மீம்ஸ்களையும், வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.
Hating people because of their color is wrong. Black is also a color and this is a small dedication to our brothers and sisters #blacklivesmatter pic.twitter.com/MiW838D734
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) September 11, 2020