நாட்டிலுள்ள விமான நிலையங்கள் மூடப்படவில்லை என அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
எனினும், கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்,
“நாட்டில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ஒரு கருத்து உள்ளது. எனினும், நாங்கள் விமான நிலையங்களை மூடவில்லை. அவை இப்போதும் கூட திறந்திருக்கும்.
ஆனால், விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். விமான நிலையங்களில் அனைத்து வசதிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.