நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகிறார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமனற தேர்தல் வர இருப்பதால், அடுத்த 2 மாதத்தில் ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்ற தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஜினிகாந்த், உரிய நேரத்தில் கட்சி தொடங்குவதாக இல்லை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். அதன்பிறகு எந்த அறிவிப்பும் இன்றி நடிகர் கமல்ஹாசன் திடீரென கட்சியை தொடங்கினார்.
தற்போது ரஜினியும், கமலும் இணைந்து அரசியலில் ஈடுபடுவார் என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பருக்குள் ரஜினி கட்சி தொடங்குவாரா.? இல்லை என்பதற்கான விடையை மக்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வலுவான கட்டமைப்பு இருந்தால் தான் இறங்க வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் தெளிவாக இருக்கிறார்.
இதனால்தான், ரஜினி ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றி ஒவ்வொரு ஊரிலும் கட்டமைப்பு வலிமைப்படுத்தி வருகிறார். எதிர்பார்த்த மாற்றம் நடக்கும் என நம்பிக்கையுடன் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகி அரசியல் களத்தில் இறங்க உள்ளார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை நவம்பர்க்குள் எடுக்க சொல்லி படக்குழுவினரிடம் கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முழு அரசியல் ரஜினிகாந்த் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.