காலையில் எழுந்தவுடன் இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க!

காலை வேளையில் தூங்கி எழுந்தவுடன் நாம் செய்யும் சில செயல்களால் நமது உடல் குண்டாகி தொப்பை பெரிதாகிறது.

தண்ணீர் குடிக்காமல் இருப்பது

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை போடும். அதாவது, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்க முடியுமாம். மேலும், குடலில் உள்ள நச்சு பொருட்களை எளிதாக இவை வெளியேற்றி விடுமாம்.

சூரியன்

காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். காலை வேளையில் சூரிய ஒளியை தவிர்ப்பவர்கள் குண்டாகி தொப்பை போட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

காலை உணவு

யாரெல்லாம் காலை உணவை சாப்பிடாமல் இருக்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் தொப்பை வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காலை உணவை தவிர்த்தால் க்ளுகோஸ் அளவு சமநிலையில் இருக்காது. எனவே, கொழுப்புகளை இவை குறைப்பதை மெதுவாக்கும்.

நொறுக்கு தீனிகள்

காலையில் எழுந்தவுடன் தேவையற்ற நொறுக்கு தீனிகளை பசிக்காக சாப்பிட்டு விட்டு, பிறகு உடல் எடை கூடிவிட்டதே என அவதிப்படுவர். இந்த நிலைக்கு காரணம் நொறுக்கு தீனிகள் தான். நீங்கள் நொறுக்கு தீனியை காலையில் சாப்பிட்டால் கட்டாயம் உடல் எடை கூடி தொப்பை போட்டு விடும் என்பதை மறக்காதீர்கள்.

செல்போன் வேண்டாம்

காலையில் கண் விழிக்கும் போது பலரும் தேடும் பொருள் செல்போன் தான், காலையில் எழுந்தவுடன் மணி கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இதனுடன் நேரம் செலுத்தினால் கட்டாயம் தொப்பை விழும்.