இதுவரை நாம் பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் பள்ளி பருவ சிறு வயது புகைப்படம்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

அதன்பின் யாருடன் இணைவார் என பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை குறித்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.

அதில் தளபதி விஜய் பார்ப்பதற்கே செம க்யூட்ட்டாக உள்ளார், இதோ அந்த புகைப்படங்கள்.