கோவாவில் காதலர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே ஏற்பட்ட காதல் இன்று வரை தொடர்ந்துவருகின்றது.
படப்பிடிப்பு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா வரை இருவரும் ஒன்றாகவே சேர்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் திருமணம் மட்டும் எப்போது இன்னும் கூறாமல் ரசிகர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர்
கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நயனும், விக்கியும் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானம் மூலம் கொச்சி சென்ற போட்டோஸ் வெளியானது.
அங்கு தடபுடலாக ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர, அவை தாறுமாறு வைரலாகின.
கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் கோவாவிற்கு சென்றுள்ள இருவரும், அங்கு தங்கியிருக்கும் ஹொட்டல் கார்டனில் நயன்தாரா நைட்டி அணிந்து உலா வரும் புகைப்படங்களை விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.