பிரபல சீரியல் நடிகை தற்கொலை!!

சீரியல் நடிகை ஒருவர் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த டிவி நடிகை ஸ்ராவனி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாய்ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். ஸ்ராவனிக்காக சாய்ரெட்டி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு ஸ்ராவனியை திருமணம் செய்து வைக்கவும் அவரது பெற்றோர்கள் உறுதிமொழி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென சாய்ரெட்டியுடன் ஏற்பட்ட உறவில் முறிவு ஏற்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலமான தேவராஜ் ரெட்டி என்பவருடன் ஸ்ராவனிக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஸ்ராவனியுடன் தனிமையில் இருந்த காணொளியினை மிரட்டி அவர் பணம் பறித்ததாகவும், இதனால் கடும் உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவரை ஸ்ராவனி சந்தித்து உள்ளார். அவரை கதாநாயகியாக்க போவதாக ஆசை வார்த்தை கூறிய அசோக்குமார் அதன் பின்னர் அவரை பயன்படுத்திவிட்டு கைவிட்டதாகவும் தெரிகிறது.

இதனால் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதாலும், ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டப்பட்டதாலும், ஏற்பட்ட மன உளைச்சலில் ஸ்ராவனி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஸ்ராவனி பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் இரண்டு காதலர்களான சாய்ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகியோர்களை பொலி செய்துள்ளனர் என்றும் தலைமறைவாக உள்ள அசோக்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.