பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலின் மூலம் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் சரண்யா. அதனை தொடர்ந்து சின்னத்திரையில் களமிறங்கிய சரண்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும், இந்த சீரியலின் மூலம் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத்தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரன் என்ற சீரியலில் முக்கிய கதாநாயகியாக நடித்து நடித்தார்.
ஆனால் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகிய அவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சரண்யா ராகுல் என்பவரைக் காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இதையடுத்து, சமீபத்தில் மிகவும் வித்தியாசமாக கடலுக்கு அடியில் ஜோடியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அத்தகைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சரண்யா, சாதாரண உடையில் கடலுக்கடியில் இருப்பது சவாலாக இருந்தது. மேலும் அதனுடன் சுறாக்கள் குறித்தும் பயமாக இருந்தது.
ஆனால் அவர் அருகில் இருந்ததால் இவை சாத்தியமானது. இந்தியாவிலேயே கடலுக்கடியில் ஜோடியாக எடுத்த முதல் போட்டோ ஷூட் இது என பதிவிட்டுள்ளார்.