பறவைக்காய்ச்சல், சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல், எபேலோ வைரஸ் காய்ச்சல் போன்ற பயமுறுத்தும் நோயின் வரிசையில் தற்போது இந்தியா முழுவதும் மிரட்டிக் கொண்டிருந்தது பன்றிக் காய்ச்சல்.
2009 ஆம் ஆண்டு முதன் முதலாய் விஸ்வரூபம் எடுத்த பன்றி காய்ச்சல் என கூறப்படும் ஸ்டைன் ஃப்லூ இந்தியா முழுவதும் மிக வேகமாய் பரவியது.
பன்றி காய்ச்சல் சுவாசிக்கும் போது காற்றின் வழியாக நமக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்த வைரஸை ஸ்வைன் ஃப்ளூ என குறிப்பிடுகின்றனர். இதில் பல வகைகள் இருக்கின்றன. H1N1, H1N2. H1N3. H3N1. H3N2 மற்றும் H2N3. இதில் முக்கியமாக தொற்றுவது பிமிழி1 வகை தான்.
இந்த வைரஸ் முதலில் பன்றிகளில் இருந்ததாக கூறப்படுகிறது. இது மனிதர் மற்றும் பன்றிக்கு இடையிலான நேரடி தொடர்பு மூலமாக தொற்றுவது இல்லை. எனினும் இந்த புது மரபு சுழற்சியினால் தோன்றியிருக்கலாம் என மருத்துவர் கள் கருதுகின்றனர். இந்த வைரஸ் முன்னரே பாதிக் கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து தான் காற்று வழியாக பரவுகிறது.
நோயின் அறிகுறிகள்:
- பன்றிக் காய்ச்சல் ஏ.பி.சி என்று மூன்று வகைப்படுகிறது. அப்போது பாதிக்கப்பட்டவருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும்.
- தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, வாந்தி, பசியின்மை, குளிர், மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் பாதிக்கப்பட்டவருக்கு இருக்கும்.
தடுக்கும் முறைகள்
- பன்றிக்காய்ச்சல் தொற்று உள்ளவர்கள் பராமரிக்கப்படும் பகுதிக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க வேண்டும்.
- சளி, இருமல் இருப்பவர்கள் கைக்குட்டையை பயன்படுத்தி தேவைப்படும் போது வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
- வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, தொட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
- சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக பராமரிக்க வேண்டும்.
- பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, குழந்தையும் பலவீனம் அடையும்.
- காய்ச்சல் வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.