பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலம் ஆகியுள்ளார்கள். அதே நிகழ்ச்சியில் பங்குபெற்று இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் தீனா.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் கைதி படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரமும் நன்றாக மக்களிடம் ரீச் ஆனது.
அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார் தீனா. காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானாலும் இவர் செய்த Prank Call தான் மக்களிடம் அதிக ரீச். இந்த Prank Call யோசனையை கொடுத்ததே ஜனனி நிவேதா என்பவர் தானாம்.
மேக்கப் கலைஞராக பணியாற்றிய இவர் திரௌபதி படத்தில் திரௌபதியின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.