தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலக அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவ..
இவர் நடித்து வெளிவந்த பல படங்கள் பல கோடி வசூலை பாக்ஸ் ஆபிசில் குவித்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி உலகளவில் சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இவர் இப்படத்திற்கு பிறகு தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க போகிறார் என தகவல்கள் ஏற்கனேவே வெளிவந்திருந்தது.
சமீபத்தில் கூட வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்காக இவர் மொட்ட பாஸ் கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த கெட்டப் வேதாளம் படத்தின் ரீமேக்கிற்காக என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் தற்போது அந்த கெட்டபின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுவைத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதோ அந்த கெட்டப் மேக்கிங் வீடியோ..