நாதஸ்வரம் சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாய் சக்தி.
அந்த சீரியலுக்கு பிறகு ஜோடி, கிச்சன் சூப்பர் ஸ்டார் என சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். கடந்த ஆண்டு கூட குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அந்நிகழ்ச்சிக்கு முன் சினிமா வாய்ப்பு இல்லாததால் துபாய் சென்றிருந்தார். அங்கிருந்து வந்த அவருக்கு பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த வாழ்க்கை சரியாக வரவில்லை என்பதால் விவாகரத்து பெற்றார்.
இப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (செப் 16, 2020) சாய்சக்திக்கும், மீஞ்சூரைச் சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் சாய் சக்தியின் உறவுக்கார பெண் என்று கூறப்படுகிறது.
இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்,