மலையாள சினிமா சீரியல்களில் நடித்து வருபவர் சபரிநாத். 43 வயதான இவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
திடீரென அவருக்கு நெஞ்சில் வலி வர தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று செப்டம்பர் 17 மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவர் Minnukettu, Amala and Swami Ayyappan போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
அண்மையில் அறிமுகம் செய்த Padatha Painkili என்ற சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இவரின் இந்த திடீர் மரண செய்தியை கேட்டு பிரபலங்கள் அனைவரும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.