அதிக அளவில் பால் குடிக்காதீங்க.. !!

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி பாலில் கால்சியம், வைட்டமின் பி12, விட்டமின் டி, புரோட்டீன், பொட்டாசியம், மினரல்கள், போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளது. இதனால் தான் பால், மக்களின் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது.

இருப்பினும், அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது அந்த பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்சனை உண்டாகும்.
  • வாந்தி, குமட்டல், வயிறு மந்தமாக இருப்பது போல் உணர்ந்தால் அதிகம் பால் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
  • சிலருக்கு பால் குடிப்பதால் ஒவ்வாமை, சரும அலர்ஜி உண்டாகும்.
  • அதிக பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.
  • நாள் ஒன்றுக்கு 2 கிளாஸுக்கு மேல் பால் குடித்தால் ஆண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் பிரச்சனையும், பெண்களுக்கு சில வகையான புற்றுநோய்களை சந்திப்பார்கள்.
  • எனவே முடிந்தவரை பால் அதிகமாக நீங்கள் குடிப்பவராக இருந்தால், அதனை குறைத்து கொண்டு மாறாக, தயிர், மோர், வெண்ணை, சீஸ், பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.