மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான திரிஷ்யம் படத்தை மறக்க முடியுமா என்ன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வந்த இப்படம் தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிக்க பாபநாசம் என ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தில் அதிரடி போலிஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ஆஷா சரத். மேஜர் ரவி இயக்கத்தில் கர்மயோதா, பியாண்ட் தி பார்டர்ஸ் என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார்.
மோகன் லால், மம்முட்டி ஆகியோரையே தன் படங்களில் ஹீரோவாக நடிக்க வைத்து வந்த மேஜர் ரவி தற்போது பிரபல நடிகர் சுரேஷ் கோபியை வைத்து முதன் முறையாக படம் இயக்கப்போகிறாராம்.
மேலும் ராணுவம் சார்ந்த கதைகளை படமாக எடுத்து வந்த மேஜர் ரவி அடுத்ததாக காதல் கதையில் இறங்கியுள்ளாராம்.
பள்ளிப்பருவத்தில் காதலர்களாக இருந்து பிரிந்த இருவர் 34 வருடங்கள் கழித்து சந்திக்கும் கதையாம்.
இப்படத்தில் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக ஆஷா சரத் நடிக்கிறாராம்.