பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தமிழில் விரைவில் தொடங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. அண்மையில் புரமோவும் வெளியானது.
தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 ல் நடிகரும் இயக்குனருமான சூர்யா கிரண் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் குழந்தையாக இருந்த போதே படங்களில் நடித்து வந்தவர்.
பிக்பாஸ் சீசன் 4 முதல் வாரத்தை கடந்த விட்ட நிலையில் சூர்யா கிரண் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தன் மனைவியான நடிகை கல்யாணியை பிரிந்துவிட்டதன் காரணத்தை கூறியுள்ளார்.
இது குறித்த பேட்டியில் அவர் வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பின் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் வீட்டை ஜப்தி செய்தார்கள், காரை எடுத்துக்கொண்டார்கள், கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் இதுதான் என கூறியுள்ளார்.
இப்படியான சூழ்நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 ம் கை கொடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது.