மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் இயக்குனர்களின் பட்டியலில் மிக முக்கியமானவர், இயக்குனர் மிஷ்கின்.இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த சைக்கோ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

மேலும் வசூல் ரீதியாக சுமார் ரூ. 25 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘பிசாசு 2’ என்றும் அதற்கான அறிவிப்பு 20 செப்டம்பர் அன்று வெளிவரும் என மிஷ்கின் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் பிசாசு கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆண்ட்ரியா தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி சைக்கோ படத்தில் வில்லனாக நடித்த மிரட்டிய நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இயக்குனர் மிஷ்கினிடம் இருந்து வெளிவரவிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக.