திருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி!!

பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மலர் டீச்சராக ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் சாய் பல்லவி.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் கரு மற்றும் மாரி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவரது இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் உங்களில் யார் பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி இன்று நடிகையாகி முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். அதாவது நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

அதற்கான காரணமாக திருமணம் செய்து கொண்டால் அப்பா அம்மாவை வீட்டு மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்பா அம்மாவை பிரிவதில் மனசில்லை. கடைசி வரை அவர்களுடன் இருந்து அவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்.

இதனால், சாய்பல்லவி திருமணம் குறித்து இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வருங்காலத்தில் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வார் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.