பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்பந்தமான இரு போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இதனால், நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? காலதாமதம் ஆகுமா? அல்லது வேறு போட்டியாளர்கள் கிடைப்பார்களா? என்ற கடும் அப்செட்டில் சில மாற்றங்களை செய்யவும் பிக் பாஸ் குழு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட புது விதிகளும் போடப்பட்டு இருக்கிறது.
அதன் படி எந்தவொரு போட்டியாளரும் டபுள் பெட் பயன்படுத்தவும் தடை விதிக்கபட்டிருப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சமூக விலகல் உள்ளிட்ட ஏகப்பட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருக்கும் என தெரிகிறது.