நடிகர் சூர்யா தன்னை நடிக்கத்தெரியாது என குறை கூறியவர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு டாப் ஹீரோவாக தன் உழைப்பால் உயர்ந்தவர். அண்மையில் அவரின் படங்கள் தோற்ற போதிலும் அவர் அதை ஏற்றுக்கொண்டார்.
அகரம் என்ற சுய அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான மாண மாணவிகளுக்கு கல்வி அளித்து வருகிறார்.
அவரின் சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலனுக்கு ரூ 30 லட்சம் நன்கொடை வழங்கினார்.
கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.
சங்கத்தில் தற்போது போதுமான நிதி இல்லாத நிலையில் சூர்யா கொடுத்த தொகை காப்பீடு பிரீமியம்க்காக நீதிபதி ஜெயச்சந்தினிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் 1300 உறுப்பினர்கள் பயனைடைவார்களாம்.