எடையைக் குறைக்க சியா விதைகளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

எடை இழக்க விரும்பும் நபர்களுக்கு, சியா விதைகள் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஏனெனில் ஒழுங்கான முறையில் சியா விதைகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், உங்கள் செரிமான ஆரோக்கியத்தை இது அதிகரிக்கும், மேலும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி சியா விதைகள் உள்ளுறுப்பு கொழுப்பு திசுக்களைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் சியா விதைகள் எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும் இதனை எப்படி உணவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

சியா விதைகள் எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகின்றன?

இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை சாப்பிடுவதால் உங்களுக்கு கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து கிடைக்கும். இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில், 40 சதவீதம் ஆகும்.

உயர் ஃபைபர் உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், இதனால் நீங்கள் நீண்ட நேரம் பசி உணராமல் இருப்பீர்கள்.

எடை இழப்பு உணவைப் பின்பற்றும் போது, தினமும் 30 கிராம் ஃபைபர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

உங்கள் சியா விதைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். எல்லா விதைகளையும் போலவே, சியா விதைகளிலும் செரிமான தடுப்பான்கள் உள்ளன.

சியா விதைகளை நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு, அது நன்றாக முளைத்துள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

விதைகளை திரவத்தில் (நீர் அல்லது தாவர அடிப்படையிலான பால்) ஊறவைப்பதன் மூலம் நீங்கள் அது நன்றாக முளைத்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

இதை நீங்கள் இரவு முழுவதும் ஊறவைக்கலாம் அல்லது 20 நிமிடம் கூட ஊறவைக்கலாம்.

வேறு நன்மைகள்
  • நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
  • அகால வயதைத் (ப்ரீமெச்சூர் ஏஜிங்) தடுக்க உதவுகிறது.
  • கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.