அஜித், விஜய் பட வாய்ப்புகள் கிடைக்க இப்போதெல்லாம காத்துக்கிடக்கவேண்டும் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் நடிகரின் முடிவே இறுதியானது.
விஜய்யின் ஆரம்பகாலங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படத்தை எழில் இயக்கியிருந்தார்.
இவர் அஜித்தை கொண்டு பூவெல்லாம் உன் வாசம், ஜெயம் ரவியை வைத்து தீபாவளி ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார்.
அடுத்ததாக கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து படம் இயக்கப்போகிறாராம். இதில் வில்லனாக பார்த்திபன் நடிக்கிறாராம்.
எழில் தற்போது விஷ்ணு விஷாலை வைத்து ஜெகஜால கில்லாடி, ஜி.வி.பிரகாஷ் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய எடுத்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர காத்திருக்கின்றன.