ராஜா ராணி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா!

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் ராஜா ராணி.

ஆம் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என திரையுலக பட்டாலேமே நடித்து 2013ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் தான் ராஜா ராணி.

இப்படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் ஜெய் இருவரும் நடித்திருந்தனர். இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் ராஜா ராணி படத்தில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு பதிலாக முதலில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ஆர்யா நடித்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.