துபாயில் உள்ள சார்ஜா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு 20 வயது பெண்மணி சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நீண்ட காலமாக செரிமான கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது.
பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் பலனில்லாத நிலையில், இவரது கருப்பையை ஸ்கேன் செய்த சமயத்தில், அதில் கட்டி வளர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதில், பெரும் சவாலாக கட்டி மிகவும் நெருக்கமாக கருப்பையில் வளர்த்து இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கருப்பை குழாய் மற்றும் கருமுட்டைகள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் பெண்மணியின் இனப்பெருக்க உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு, அவரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும் சோகமும் இருந்தது.
நுட்பமான அறுவை சிகிச்சை மூலமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்த மருத்துவர்கள், பலமணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றியுள்ளனர். தற்போது பெண்மணி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.