பிக்பாஸ் பிரபலத்தின் பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4ன் ஒளிபரப்பு டிவியில் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அபிஹாசன், டிக் டாக் இலக்கியா, நடிகை அமிர்தா ஐயர் நாங்கள் இதில் கலந்துகொள்ளவில்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.

தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. இதில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் நடிகர் சிவபாலாஜி.

இவருக்கு தன்வந்த், கத்ஜல் என இரு மகன்கள் இருக்கிறார்கள். அவரின் மனைவி மதுமிதா. ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகன்கள் இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை உயர்த்திய நிலையில் கட்டணத்தை குறைக்கச்சொல்லி 240 பெற்றோர்கள் கையெழுத்திட்டு மனு ஒன்றை பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தனர்.

மதுமிதா இது குறித்து மின்னஞ்சலும் அனுப்பியிருந்தார். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தூண்டிவிடுவதாக கூறி மதுமிதாவின் மகன்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது.

இது குறித்து பலமுறை விளக்கம் கேட்டும் பள்ளி நிர்வாகம் பதிலளிக்காத காரணத்தினால் சிவபாலாஜி மற்றும் மதுமிதா இருவரும் தெலுங்கானா மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

இது பற்றிய விசாரணைக்கு பின் மதுமிதாவின் மகன்களை பள்ளியில் சேர்க்க ஆணையம் உத்தரவிட்டது.