படவாய்ப்பு தருவதாக கூறி பிரபல நடிகையை ஏமாற்றிய தயாரிப்பாளர்!

சினிமாவில் பிரபலங்கள் அனைத்துவித துறையிலும் புகழ் பெறவேண்டும் என்று நினைத்து வருவார்கள். அந்த வகையில் தற்போது பாடகர், இசையமைப்பாளர்கள் அனைவரும் நடிகர் நடிகைகளாக வளம் வர ஆசைப்படுவார்கள்.

அந்தவகையில் பின்னணி பாடகியாக இருந்து தற்போது நடிகையாக வளம் வருபவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். இதையடுத்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து சர்ச்சையையும் ஏற்படுத்தினார்.

சமீபத்தில் ஒரு நபர் தன்னை ஒரு தயாரிப்பாளர் என அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

என்னை சந்தித்த அவர் ஒரு வெப்சீரிஸ் ஒன்றை புதிதாக தயாரிக்க இருப்பதாகவும், அதில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவை நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் என்றதும் வாயைப் பிளக்காமல் உடனடியாக முதலில் கதையை கூறுங்கள் என புத்திசாலித்தனமாக கேட்டுள்ளார் ஆண்ட்ரியா. கதை சொல்வதற்கு விரைவில் வெப்சீரிஸ் இயக்குனரை அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு சென்று விட்டாராம்.

பிறகுதான் அவர் ஒரு தயாரிப்பாளரே இல்லை என்று புரிந்தது. அவர் எதற்காக இப்படி என்னை ஏமாற்ற நடந்து கொண்டார் என்பது புரியவில்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதுபோல் பல மோசடி கும்பல்கள் பெண்களை ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.