தனது நடைமுறைகளுக்கு கட்டுப்பதாக கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருகின்றமை தெரிந்ததே.
இந்த வரிசையில் மேலும் பல கணக்குகளை முடக்கும் பணியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
சீனாவை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கணக்குகளையே பேஸ்புக் இவ்வாறு நீக்கி வருகின்றது.
அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்காக குறித்த கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இதுவரை இவ்வாறான 155 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், 6 இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நொவெம்பர் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.