சங்கீத வித்துவான் எஸ்.பி.பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நடிகை நயன்தாரா!!

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

ஆனால் இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை நயன்தாரா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.