இந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா?

தமிழ் சினிமாவில் மாடலிங் முடித்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம். அந்தவகையில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆன்ந்த். இதையடுத்து பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தார் யாஷிகா.

இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் தொடர்ந்து அவர் அதிக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தொடர்ந்து போட்டோ ஷுட்டாக எடுத்து வருகிறார்.

அடுத்து எப்போது என்ன படம் நடிப்பார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டாவில் யாஷிகா ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.

அதில் அவர் டேட்டிங் என பதிவு செய்து வெட்கப்படுவது போல் புகைப்படம் போட்டிருக்கிறார். ஆனால் யாருடன் டேட்டிங் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.

ஆனால் சமீபகாலமாகவே நடிகை யாஷிகா ஒரு நடிகருடன் ஊர் சுற்றி வருகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அது காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் வெளியில் செல்வது படப்பிடிப்புகளுக்காக என்று தம்பி ராமையா சமீபத்திய பேட்டியில் கூறியும் உள்ளார்.