பண்ணை வீட்டில் பாடகர் எஸ்.பி.பி உடல்!!

பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறைவு இந்திய சினிமாவை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அவருக்கு சொந்தமான இடத்தில் தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது, அதற்கான வேலைகள் நேற்றே நடக்க தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் தற்போது அவரது உடல் பன்னை வீட்டில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பத்திரிக்கையாளர்கள், போலீசார் என அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக அங்கு யாரையும் அனுமதிக்கவில்லையாம்.