மறைந்த பாடகர் எஸ்.பி.பி பற்றி பிரபலங்கள் பலர் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அவர்கள் சொல்வதை கேட்கும் போது இவ்வளவு நல்லவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என மன வருத்தம் இருக்கிறது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஸ்வப்னா தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு இப்போதும் அவரது வார்த்தைகள் நியாபகம் இருக்கிறது. ஒரு பாடல் நிகழ்ச்சி எங்களுக்காக செய்ய கேட்டேன். அதற்கு அவர் ஒரு கண்டிஷன் போட்டார், என்னவென்றால் ஒரு குழந்தை கூட அழுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.
அப்படி அழுதாலும் அவர்களை படம் பிடிக்க கூடாது, அவர்கள் குழந்தைகள் TRPக்காக பயன்படுத்தக் கூடாது என்றார்.
அவர் கூறியது எனக்கு தொலைக்காட்சிக்கான பார்வையை மாற்றியது, நன்றி எஸ்.பி.பி அவர்களே என பதிவு செய்துள்ளார்.
https://twitter.com/SwapnaDuttCh/status/1309457360608309248