கொரோனாவை யாரும் திட்டாதீங்க… தவறுக்கு கிடைத்த சாபம்!

உலக மக்களின் உயிராக திகழ்ந்த பாடகர் எஸ்பிபியின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மண்ணிற்குள் துயில் கொள்ளும் பாடும் நிலாவான எஸ்பிபி சமீபத்தில் கொரோனா குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

கொரோனாவை கொடுமை, ராட்சஷி என்று யாரும் திட்டாதீர்கள். இது நமக்கு சாபம். ஆம் நாம் செய்த தவறுக்கு கிடைத்த சாபம் என்று தான் கூற வேண்டும்.

இயற்கைக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல், முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்று இயற்கையை பாழாக்கிவிட்டு, மயானமாக அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதில் என்ன நியாயம். இதன் பலனை நாம் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்.

மேலும் ஜாதி, மதம், மற்றும் தனது உறவுகள் என்று சுயநலமாக இல்லாமல், எல்லோரும் ஒன்று தான் என்று இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் அதிகமாக இருந்தால் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம். அவ்வாறு இல்லை என்றால் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்று பேசியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.