ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
சில நாட்களிலேயே தொற்றில் இருந்து மீண்ட அவர் வேறொரு சில அறிகுறிகளால் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி. சரண் ரசிகர்களுக்கு அறிவித்த வண்ணம் இருந்தார்.
ஆனால் திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு நேற்று (செப்டம்பர் 25) அவர் உயிரிழந்தார். 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தெலுங்கு பிக்பாஸ் குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இதோ,
#BiggBossTelugu4 Tribute To The Legend #SPBalasubramanyam
We Love you so much!!! pic.twitter.com/EJA6dvAIyY
— starmaa (@StarMaa) September 26, 2020