அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பல் துலக்கும் போது சுமார் 19 சென்டிமீற்றர் நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசம் ரோயிங் லோவர் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வரும் 39 வயது நபர் ஒருவர் கடந்த செப்டம்பர் 15 தேதி காலை வழக்கம்போல் பல்துலக்கி உள்ளார்.
அப்போது குறிப்பிட்ட நபர் தனது தொண்டையின் பின்புறத்தை டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய முயன்ற போது, டூத் பிரஷை விழுங்கியுள்ளார்.
இதனை குடும்பதாரிடம் தெரிவித்து, பின்பு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில், அவரது தொண்டை, உணவுக்குழாய் என பகுதிகளில் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதனையடுத்து டூத் பிரஷ் அவரது அடிவயிற்று பகுதிக்குள் சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் அவருக்கு லபரோடோமி பரிசோதனையில் அடிவயிற்றில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்பு அவருக்கு 30 முதல் 35 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு டூத் பிரஷ் அவரது அடிவயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
தற்போது குறிப்பிட்ட நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிருக்கு எந்த வித ஆப்பத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் பிரஷை விழுங்கிய போது அதிர்ஷ்டவசமாக அவரது வயிற்றில் எந்த ஒரு வலியும் ஏற்படவில்லை என்றும் அவரது அடிவயிற்றுப் பகுதியில் சிறிய அளவிலான அசௌகரியத்தை மட்டுமே உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.