எஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்…

பிரபல பாடகர் எஸ்பிபியின் மறைவு ஒட்டுமொத்த திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று அவரது உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு நடிகர் விஜயைக் கண்ட அவரது ரசிகர்கள் உடனடியாக அவரை சூழ்ந்து கொண்டனர்.


இதனையடுத்து பொலிசார் பாதுகாப்புடன் விஜய் அழைத்துச்செல்லப்பட்ட போது லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர் ஒருவரின் காலணியை விஜய் தாமாக முன் வந்து எடுத்துக்கொடுத்த சம்பவம் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.