சோனா பெட் மாவட்டத்தில் நூர்ஹாசன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அதற்கு தன்னுடைய மாமியார் உடந்தையாக இருப்பதாகவும் சந்தேகம் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கடந்த ஐந்தாம் தேதி தனது மைத்துனிக்கும், மனைவிக்கும் போதை மருந்தை கொடுத்து கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்து இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று அவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை எரிக்க முயற்சி செய்துள்ளார்.
வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த உடல்களை பரிசோதனை செய்ததில் இறந்த பின்பு அவர்களுடைய உடலில் நூர்ஹாசன் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொலை வழக்கை பதிவு செய்து அவரை விசாரித்து வருகின்றனர்.