நடிகர் புபேஷ் குமார் பாண்டியா நுரையீரல் புற்றுநோயால் காலமானார்!!

கொரோனாவின் தாக்கம் இன்னும் உலகின் பல பகுதிகளில் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 2 லட்சம் பேர் இந்நோயால் பாதிப்பட்டு இறந்துள்ளனர்.

அண்மையில் இந்திய சினிமா நடிகர் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ் புட் ஆகியோர் இறந்தது தொடர் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் புபேஷ் குமார் பாண்டியா நுரையீரல் புற்றுநோயால் காலமாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி ஹிட்டான விக்கி டோனர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் கடந்த சில வருடங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் அந்நோயின் தாக்கம் 4 ம் கட்டத்தை எட்டியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தை தயாரித்துள்ள குனீத் மோங்காவின் சிக்யா எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் புபேஷின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளித்தது.