எப்போதும் என்னை எஸ்.பி.பி என்றும் பாடகர் என்று எளிமையாக சொன்னால் போதும் அதற்கு மேல் வேறெந்த பட்டமும், விருதும் குறிப்பிடவேண்டாம் என தன்னக்கட்டத்துடன் வாழ்ந்த எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார்.
அவரின் உடல் நேற்று திருவள்ளூரில் உள்ள அவரின் பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் செய்தியாளர்களிடத்தில் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவிடம் கட்டப்படும். இதுகுறித்து ஒரு வாரத்தில் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.