கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நடிகை ரியா, அவரின் தம்பி சோவிக் ஆகியோர் கைதாகினர்.
இவர்களுடன் சுஷாந்தின் வீட்டு மேனேஜர் சாமுவேல் மிரண்டா மற்றும் வேலைக்காரர் திபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்.
இதில் போதைபொருள் கும்பலை சேர்ந்த பாரிகர், கைசான் இப்ராகிம் ஆகியோரிடம் இருந்து சோவிக் போதை பொருளை வாங்கி தன் அக்கா ரியாவிடம் கொடுத்ததும் ரியா அதை சுஷாந்திற்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் மேனேஜர் மற்றும் பணியாளர் இருவரும் கஞ்சாவை சிகிரெட்டில் நிரப்பி சுஷாந்திற்கு கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.