கடைசி நேரத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு உடலில் என்ன நடந்தது- மருத்துவர்கள் விளக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி கடந்த 25ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் போராடி வந்த எஸ்.பி.பி நோயில் இருந்து மீண்டு வருவார் என ஒட்டுமொத்த ரசிகர்களும் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை, பாடும் நிலா நம்மைவிட்டு பிரிந்தார்.

இந்த நிலையில் எஸ்.பி. சரணுக்கு மருத்துவமனை பில் கட்டுவதில் பிரச்சனை என்றெல்லாம் வதந்திகள் பரவின. இதுகுறித்து சரண் மற்றும் மருத்துவ குழுவினர் பேட்டி கொடுத்தனர்.

அப்போது மருத்துவ குழுவினர் பேசும்போது, எஸ்பிபி மரணத்திற்கு 48 மணி நேரம் முன்பிருந்து அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது. எஸ்பிபி மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியது.

அவருக்கு கடைசி 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்கவில்லை. எனவே, அவருக்கு மூச்சு திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு உயிர் பிரிந்தது என கூறியுள்ளனர்.