திடீரென Mr & Mrs சின்னத்திரையில் இருந்து விலகிய பிக்பாஸ் புகழ் ரம்யா

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் சீரியலில் நடித்து பிரபலமானவர்கள், பாடல், நடனம் நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் அவர்களது நிஜ ஜோடியுடன் இதில் கலந்து கொள்கிறார்கள்.

அந்த ஜோடிகளுக்கு ஏராளமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது, பிரபலங்களும் ஜாலியாக இதில் பங்குபெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் திடீரென இதில் இருந்து விலகியுள்ளார் NSK ரம்யா. பிக்பாஸ் ரம்யா என்றால் இன்னும் இவர் பிரபலம். தனது கணவர் சத்யாவுடன் பங்குபெற்று வந்த இவர் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.

ஏனென்று அவர் தனது இன்ஸ்டாவில், இதில் 2 நிகழ்ச்சி தான் நாங்கள் தாக்கு பிடிப்போம் என்று நினைத்தோம், ஆனால் பரவாயில்லை பல எபிசோடுகள் கலந்து கொண்டோம்.

எனக்கு வைரல் பீவர் அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை, விரையில் வருவோம் என ரசிகர்களுக்கு இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.